டோரதி ... ஒடுக்கு முறை மீதான கலக குரல் ...

டோரதி ...
ஒடுக்குமுறை மீதான கலககுரல் ...
பரோட்டா நல்லது கெட்டது இந்த உடல் நலன் சார்ந்த விவாதங்களை தள்ளி வைத்து விடுவது நல்லது ஆனால் மதுரையின் தேசிய உணவாக பாவிக்கபடுவது இப்போது அதுதான் அதில் உடல் உழைப்பாளிகளின் நாவுகளில் ருசிதாண்டவமாடும் தோசை கல் இசையுடன்
இப்படியான பிணைப்புகளோடு கதாபாத்திரங்கள் கார்த்தி சுப்பு அதாவது
சால்னாவும் பரோட்டாவும் போல் பிரிக்க முடியாத நட்பு ஆண்ஜாதி ஆதிக்க பின்புலத்தில் விசில் வீரய்யாக்கள் ஒருபுறம் தங்கள் குரூர இச்சைகளுக்கு வெத்தலையாய் கசக்கி பிழிந்து நக்கும் ஒரு குடும்ப பின்னணி;
இன்னொரு பக்கம் கைம்பெண்தாய் அரவணைப்பில் வளரும் இன்னொரு பிம்பம்
இப்படி நகர நாகரீக வாடையும் முழுமை பெறாத வர்க்கமும் ஜாதியும் தடியெடுத்த தடிப்பயல்கள் ராஜ்ய சேட்டைகளை உச்சபட்ச சமாய் ரத்தகறையுடனேயே பரோட்ட உண்ணும் மனோபாவ காட்சிகளை கதாநாயகர்களிடம் இயல்பாகும் தருணங்களை மிகையுணர்ச்சி இல்லாமல்
செதுக்கி அடுக்கி இருக்கிறார் கார்த்தி சுப்புராஜ் !!
சும்மாவே சலங்கை கட்டி ஆடும் ஜாதிவெறி ஆணாதிக்க பேய் முரடர்களுக்கு
அந்த வீட்டில் இருந்து அதுவும் கடைகுட்டி சிங்கம் பெட்டை குணம் கொண்டு திமிறி எழும்போது கொட்டை அசிங்கங்களின் குரூரம் எப்படியெல்லாம் வெளிப்படும் என்பதை சமரசமின்றி சாட்சி சொல்லி காட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர்

ரிஷிகாந்தின் சிகரட் உட்கார்ந்த உதடுகள் அவரின் கரடுமுரடு தட்டிப்போன உடல்மொழி அதனை வெளிப்படத்திய விதம் அடங்கேப்பா நடிப்பின் இமயமாய் நிமிர்கிறார் மகாகலைஞனாக
போலவே தன் அண்ணியான டோரதியையும் சந்தேக பேய்கள் பலி கொண்ட பிறகுதான் தனக்குள் இருக்கும்
பத்ரகாளியை பிரவிசிக்கும் சுப்புவாக மாறும் கணந்தோறும் சனந்த், ரிசிகாந்தை
மிஞ்சி இமயச்சிகரமாக மின்னத்தொடங்குகிறது அவரின் பாத்திரம்
இல்லை இல்லை அவளின் உக்கிரம்!
கதையை முழுமையாக சிலாகிக்க விரும்பவில்லை, சாரத்தை அதன் கலகத்தை துல்லியபடுத்த விரும்புகிறேன்
உண்மையை டோரதியின் வெற்றியின் மையப்புள்ளி எதுவென்ரால்
கலாச்சார களவாணிகள், ஜாதி சொகுசு பேர்வழிகள்,மதப்பிசகு மன நோயாளிகள்,
இந்த கண்டவுடன் கதறினார்களே அதுதான்
இந்த திரைக்கலகத்தின் உச்சபட்ச ஆலிங்கனம் !! தப்பி ஓட முடியாமல் இறையாண்மையற்ற கயமைகள் கத்தி கூட்பாடு போடுகின்றன ஆனால் உண்மையில் அவைககள் எல்லாமும்
இப்படைப்பின் நேர்மை திமிரை பிரதிபலிக்கின்றன இதிலும் சில முற்போக்கு மூடி போட்டவர்களும் கூட வெளிநாட்டு சதி யென கூவி தாங்கள் குயில்கள் அல்ல நரிகள் என்பதை காட்டி அம்பலபட்டு விட்டார்கள் தமிழ் தேசிய வேசம் போட்ட குடிதேசிய கோமாளிகளும்
இப்படத்திற்கு எதிராக குலவை போட்டு சிக்கி கொண்டதும் சிறப்பு !!
இதில் சில ஆரோக்யமான விமர்சனங்களும் படைப்பு ஊக்கம் செழுமை பெற நடந்தன என்பதையும் மறுக்கவில்லை குறிப்பாக மதுரையில் நிகழ்ந்த விமர்சன கூட்டம் ஒன்றில் ஏதோ ஒருவகையில் இந்த இயக்குனரும் கூட திருநங்கைகளை புனித படுத்தி தெய்வ நிலைக்கு உயர்த்தி விடுகிறார் குறிப்பாக அதற்கு ஏதுவாக இளையராஜாவும் மீனாட்சியாக இசை அபிசேகம் செய்து வைக்கிறார் இது அவர்களை சக மனுசியாக வாழவோ அவர்களை நெருங்கவோ அனுமதிக்காத ஆபத்தை விளைவிக்கும் என்றார் அந்த விமர்சகர்
என் இந்த விமர்சனம் முழுமை புரிதல் இல்லாமலும் இருக்கலாம் என்றே முடித்தார்
இதனை கேட்ட எனக்கு இது ஒரு கோணத்தில் சரியென்றே தோன்றியது ஜாதிமதஅடிப்படைவாதிகள் வன்மத்திற்கும் இதற்கும் வேறுபாடு இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது
ஆனால் அப்படி ஒரு ஆபத்தை கார்த்திக் சுப்பு நிகழ்த்த வில்லை என்றே எனக்கு தோன்றியது என் புரிதலுக்கு உட்பட்டது.

அது என்னவெனில் சுப்பு தெய்வப்பெண்ணாக பரிணமிப்பதாக தோன்றினாலும் இளையராஜா அந்த உண்மையான பரவச நிலையை தந்தாலும்
கார்த்திக் சுப்புராஜ் உஷாராகவே டோரதியை அணுகி இருக்கிறார் என்றே எனக்கு தெளிவாக தோன்றுகிறது
Yes அதுதான் கார்த்திக்கின் உத்தமம்
மீனாட்சியை நீங்க வணங்க முடியும் ஆனால் ஒரு போதும் இந்த நிறுவன இறை நம்பிக்கை கொண்ட சமூகத்தின் முன் முத்தமிட முடியாது அதுவும் உதட்டோடு உதடு வைத்து காதல் சமைத்து காமம் ருசிக்கின்ற முத்த காட்சியை வைக்க முடியாது அதை சரியாக சக மனுச மனுசியாகவே வார்த்திருக்கிறார் எனவே புனித தெய்வமாக்கும் ஆபத்து நீங்கி விடுகிறது காலம் காலமாய் நம்முன்னோர்கள் பல நேரங்களில் பெரும்பாலும் பெண்களை எப்படி தெய்வமாக்கி அவர்களை வாழ அனுமதிக்கவில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும் ஆனால் கார்த்திக் சுப்புராஜ் என்ற படைப்பாளி டோரதியை தெரியாமல்
தெய்வமாக்கவில்லை தெரிந்தே காதல் தேவதையாக கனிய விட்டிருக்கிறான் ரிசி கிளிகளும் கொய்யும் நேர்த்தியுடன். இனி திருநங்கைகளின் இருத்தலை எந்த ஒரு கலாச்சார கொம்பனாலும் கேள்வி கேட்க முடியாது இனி புராணங்களின் புரட்டெல்லாம் டோரதியை காவு வாங்கவும் முடியாது வாடி சக மீனாட்சி என்றே பாடி அழைக்க தோன்றும் இனவிருத்தி காரணம் சொல்லி காதல் பொது உடைமை சமூகத்தில் சிறப்பு பிறப்பாளர்களின் உரிமையை இனி மறுக்கவும் முடியாது!! ஆக மொத்த்தில்
டோரதி சமுதாய விலங்குகளை வழிநடத்தி செல்ல இன்னும் ஒரு சாரதி !! இது திரைக்கலத்தின் வெற்றி !
-தவம்
Comments (...)
You must be logged in to leave a comment.


